அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் செயற்திறன்மிக்க தலைமையின் கீழ் அதிமேதகு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டலின் மூலம் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற விஷேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு பூராகவும் இன்று காலை 10.00மணிக்கு "ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒவ்வொரு வீதி" எனும் தொனிப்பொருளின் கீழ் இத்தேசிய வேலைத்திட்டம் நாடுபூராகவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் இன்று (22.11.2020) மன்னார் மாவட்டத்தின் #முசலி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட #கொண்டச்சி கிராமத்திற்கான 1 KM உள்ளக வீதியானது #31.71 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ #காதர் #மஸ்தான் அவர்களினால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்கள வட மாகாண பணிப்பாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment