வெவண்டனுக்கு சென்ற தீயணைப்பு படை ஏன் நிவ்வெளிக்கு வரவில்லை - உறுப்பினர் - ராம் கேள்வி


ராஜாங்க அமைச்சரின் வெவண்டன் வீட்டிற்குச் சென்ற தீயணைப்பு படை ஏன் நிவ்வெளி தோட்டத்திற்கு வரவில்லை என தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி இரவு நோர்வூட் பிரதேசசபைக்குற்பட்ட நிவ்வெளி - தொழிற்சாலை பிரிவில் லயன் குடியிருப்பொன்று தீ விபத்துக்குள்ளாகியதில் 12 குடியிருப்புகளும் முற்றாக எரிந்து நாசமாகி உடமைகளையும் இழந்து 50 பேர் வரையில் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மலையகத்தில் மக்கள் வாழும் குறிப்பாக லயன் குடியிருப்புகள் தீ விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடந்தேறி வருகின்றன.

மின்னொழுக்கே இதற்கான காரணம் என தீர்ப்பும் கிடைத்துகின்றது. இவ்வாறான தீர்ப்பு வழமையானதும் கூட. இவ்வாறான அசம்பாவிதங்களில் இருந்து மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் தனி வீட்டு திட்டமே சிறந்த தீர்வு என பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

அது மாத்திரமன்றி இந்த வலியுறுத்தலை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அமைச்சர் திகாம்பரத்தின் கீழ் இயங்கி வந்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு இந்த தனி வீட்டுத்திட்டத்தை சிறப்பாகவும் கிரமமாகவும் முன்னெடுத்த வந்ததையும் இவ்விடத்திவ் நினைவு கூற விரும்புகின்றேன்.

ஆனாலும் தீ விபத்து ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உரிய பகுதிக்கு பொறுப்பான உள்ளூராட்சி மன்றங்கள் எடுக்க வேண்டியது அவசியம்.
ஆனால், வழமையாக இடம்பெறும் இவ்வாறான அசம்பாவிதங்கள் குறித்து அதிகாரத்தில் உள்ள தரப்பு கண்டும் காணதது போல எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருப்பது கவலையளிக்கிறது.

கடந்த 27 ஆம் திகதி நோர்வூட் பிரதேசசபைக்குற்பட்ட நிவ்வெளி தொழிற்சாலை பிரிவில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தீயணைப்பு படைகள் வருவிக்க நோர்வூட் பிரதேசபை ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என கேள்வி எழுப்பினார்

அன்மையில் இராஜாங்க அமைச்சரின் பூர்வீக வீடு தீ பற்றியதும் நுவரெலியாவியிருந்து 34 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வெவண்டன் தோட்டத்திற்கு தீயணைப்பு படைகள் வருவிக்கப்பட்டுள்ளது

ஆனால், 12 குடியிருப்புக்களை கொண்ட லயன் தொகுதிக்கு யாரும் பொறுப்பு கூறவில்லை. 

தோட்டங்களுக்கு தீயணைப்பு படைகள் சேவையாற்ற முடியாதென்றால் தோட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள அமைச்சரின் வீட்டிற்கு தீயணைப்பு படைகள் எவ்வாறு வருவிக்கப்பட்டது.

தோட்டபுறங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு சேவையாற்ற கூடியவாறே உள்ளுராட்சி மன்ற சட்ட திருத்தம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனவே பிரதேச சபைகளினூடாக இந்த தீயணைப்பு சேவைகளை பெருந்தோட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எந்த தடையும் இல்லை.

நுவரெலியா மாவட்டத்தில் அதிக உள்ளூராட்சி சபைகளை தன் வசம் வைத்திருக்கின்ற இ. தொ. கா எங்களுடைய சபை என மார்தட்டிக்கொள்ளும் சபைத்தலைவர்களும் உப தலைவர்களும் தீயணைப்பு சேவையினை பெற்றுக்கொடுக்க வேண்டியதும் உள்ளுராட்சி மன்றங்களின் பொறுப்பே என்பதை ஏன் உணர மறந்து விட்டனர் .

இனி வரும் காலங்களிலாவது அமைச்சரின் வீட்டுக்கு மட்டும் சேவையாற்றுகின்ற தீயணைப்பு சேவை பெருந்தோட்ட மக்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

இவ்வளவு காலமும் பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புகள் தீ விபத்தில் சிக்குண்டால் எல்லா உடமைகளும் இழந்த பின் அனுதாபம் தெரிவிக்கும் நிலைமையே காணப்படுகின்றது.

அவ்வாறு அல்லாமல் தீயணைப்பு சேவையினை பெற்றுக்கொடுப்பதோடு அது தொடர்பான விழிப்புணர்வும் மக்களுக்கு வழங்குகின்ற பட்சத்தில் பெருந்தோட்ட மக்களின் உடமைகள் இழப்பினை குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :