தீபாவளி பண்டிகை - வீடுகளில் தனி மனித இடைவெளி கடைபிடித்து குடும்பத்தார் மட்டும் கொண்டாட்டம்



க.கிஷாந்தன்-
ந்துகளின் பண்டிகையான தீபாவளி பண்டிகை இன்று (14.11.2020) நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. எப்பொழுதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது இந்தமுறை கொரோனா நோய் பரவல் அதிகரித்துவருவதன் காரணமாக வீடுகளில் தனி மனித இடைவெளி கடைபிடித்து குடும்பத்தார் மட்டும் ஒன்று கூடி கொண்டாடினர்.
மலையகத்தில் பல இடங்களில் வழக்கமாக பண்டிகை உற்சாகத்துடன் குறிப்பாக, வெகு விமர்சையாக ஒன்று கூடி பண்டிகை கொண்டாடப்படும்.
தற்போது கொரோனா அச்சம் காரணமாக எளிய முறையில் இந்து மக்கள் தங்களது பண்டிகையை புத்தாடைகள் அணிந்து சமய வழிபாடுகளில் ஈடுப்பட்டு, உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்து, வீடுகளில் சிறப்பாக கொண்டாடினர்.

மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்துகள் தங்களது வீடுகளில் குடும்பம், குடும்பமாக பண்டிகையை கொண்டாடி மகிழந்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :