தற்போது வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 406 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதேவேளை 99 சதவீத மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வலயத்தின் ஏறாவூர்க் கல்விக் கோட்டத்திலுள்ள பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய மாணவன் முகமட் அஹ்சன் 195 புள்ளிகளைப் பெற்று வரலாற்றுச்சாதனை படைத்துள்ளான்.
வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை தச்சுத்தொழலாளியாவார். முகமட் அஹ்சன் மூன்று பிள்ளைகளுடைய குடும்பத்தில் மூன்றாம் பிள்ளையாவார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் காத்தான்குடி கல்விக்கோட்டத்தில் 189 மாணவர்களும் கோறளைப்பற்று மேற்கு வலயத்தில் 140 மாணவர்களும் ஏறாவூர்க் கோட்டத்தில் 77 மாணவர்களும் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப்பெற்று தகுதியடைந்துள்ளதாக வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இக்காலகட்டத்தில் மாணவர்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைவருக்கும் வலயக் கல்விப்பணிப்பாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த முறை வெளியிடப்பட்ட கபொத உயர்தர பரீட்சைப் பெறுபேற்றிலும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் சாதனையீட்டியதாக குறிப்பிடப்படுகிறது.

0 comments :
Post a Comment