தந்தையை இழந்த பாத்திமா உஸ்மா 191 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தந்தையை இழந்த நிலையிலும் கல்விதான் முக்கியம் என்ற தாயின் அரவணைப்பில் வளர்ந்து அவரின் அயராத முயற்சியினால் மொஹட் சிபான் பாத்திமா உஸ்மா கடந்த வாரம் வெளியான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் புத்தளம் மாவட்டத்தில் 191 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஸெய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கின்றார். இம்மாணவி அந்தப் பாடசாலையில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி முதன்மை வகிக்கின்றார். தமிழ் சிங்கள மொழி மூலப் பாடசாலையில் 25 மாணவர்கள் தமிழ் மொழியிலும் 2 மாணவர்கள் சிங்கள மொழியிலும் சித்தி பெற்றுள்ளனர்.

பாடசாலை அதிபர் திருமதி எப்.ஏ.ஹதா உள்ளிட்ட ஆசிரியர் குழாம் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தியுள்ளதுடன் உஸ்மா என்ற இம்மாணவி படிப்பில் மட்டுமல்லாது ஏனைய துறைகளிலும் முதன்மாயனவராக காணப்படுகின்றார் எனவும் அதிபர் தெரிவிக்கின்றார்.

0 comments :
Post a Comment