சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கண் பரிசோதனை செய்யும் நவீன "SLIT LAMP" உபகரணமும் ,முதியோர்களின் பாவணைக்காக 40 துடைக்கும் துணி துண்டுகளும் நேற்று (05) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எச்.எம் ஆஸாத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன்,லயன்ஸ் கழகத்தின் பிராந்திய தவிசாளர் திணுஷ பரணமான,லயன் கழக தலைவர் சட்டத்தரணி எம்.பி.எம் பௌஸான்,லயன் கழக வலையத்தலைவர் எம்.ஐ.எம் சியாத், வைத்தியர்எம்.சி.எம்மாஹிர்,
கண் வைத்திய நிபுணர் அமில மற்றும் நிதி உதவி வழங்கிய ஊர் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment