எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு உள்ள சம உரிமை எனக்கும் உள்ளது : முஷாரப் எம்.பி


இர்ஷாத் ஜமால்-

ரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டம் 2/3 பெரும்பான்மையை இழந்திருந்தது. ஆளும் அரசாங்கத்தின் 148 உறுப்பினர்களே ஆதரவு தெரிவித்தனர். எதிர்க் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க,156 உறுப்பினர்களது ஆதரவுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது 20ஆவது திருத்தச் சட்டம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான CM பைசல் காசிம், MS தொளபீக், HMM ஹரீஸ், ஹாபிஸ் நசீர், அ.கி.இ.மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களான இஷாக் ரகுமான், அலிசப்ரி ரஹீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர் அரவிந்த குமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் டயானா கமகே ஆகிய எம்மவரே ஆதரவாக வாக்களித்தவர்களாவர்.

இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரமதாச அவர்களின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (2020.10.23)ம் திகதி இடம் பெற்றது.

குறித்த கூட்டத்திற்கு, அரசு ஆதரவு உறுப்பினர்கள் அழைக்கப் படவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீம், அ.இ.ம.காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இரட்டைப் பிரஜா உரிமைக்கு ஆதரவாக வாக்களித்த அக்கட்சியின் உறுப்பினர் முஷாரப் ஆகியோருக்கு எழுத்து மூல அழைப்பு விடுக்கப்பட்டது.

அழைப்பை ஏற்ற பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் குறித்த கூட்டத்திற்கு பிரசன்னமாகியிருந்தார். அதன் போது அங்கிருந்த சில உறுப்பினர்கள், இரட்டைப் பிரஜாவுரிமைக்கு ஆதரவு வழங்கியது தொடர்பில் வினவிய போது "பஷில் ராஜபாக்ஸ அரசியலில் வந்து விடக் கூடாது என்பதற்காக விமல் வீரவன்ச, உதய கம்பன்வில உள்ளிட்ட இனவாதிகள் இரட்டைப் பிரஜாவுரிமையை எதிர்த்தனர். சிறுபான்மை மக்களை அரவணைத்துச் செல்லக்கூடிய, அவர்களுக்கு ஒரு காப்பகமாக பஷில் ராஜபாக்ஸ அவர்கள் இருப்பார்கள், என்று நான் நம்பியதாலேயே அதற்கு ஆதரவு தெரிவித்தேன்" எனப் பதிலுரைத்துள்ளார்.

குறித்த பதிலை ஏற்றுக் கொள்ள மறுத்த உறுப்பினர்கள், தமது அதிருப்தியை தொடர்ந்து வெளியிட்ட போது "20ஆம் திருத்தச் சட்டத்தை எதிர்க் கட்சியினர் எதிர்த்த போதிலும், அதில் உள்ள 57 பிரிவுகளும் தனித்தனியாக குழுநிலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அதில் உள்ள பல பிரிவுகளை எதிர்த்த போதிலும் சில பிரிவுகளின் போது வாக்களிக்காது நடுநிலை வகித்தனர் எதிர்க் கட்சி உறுப்பினர்கள். அப்படியாயின் அப்பிரிவுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டனர் என்றே அர்த்தமாகும். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தின் போதே நானும் இரட்டை பிரஜாவுரிமையை ஆதரித்தேன்.

 அடுத்தவர்களுக்கு உள்ள சம உரிமை எனக்கும் உள்ளது என்று கூறிவிட்டு, கூட்டத்தில் இருந்து தானாகவே வெளிநடப்புச் செய்துள்ளார்.

வெளி நடப்பை அடுத்து, அங்கு பிரசன்னமாயிருந்த ஹர்ச டி சில்வா, இரான் விக்ரம ரத்ன போன்றவர்கள் முஷாரப் அவர்களுடன் விவாதம் செய்த உறுப்பினர்களுக்கு எதிராக தமது அதிருப்தியை வெளியிட்டனர்.

19ஆம் திருத்தச் சட்டம் என்பது நாட்டுக்கு பொருத்தமான ஒன்றாகும். தகவல் அறியும் சட்டம், ஆணைக்குழுக்களின் சுயாதீனம், ஜனாதிபதியின் அதிகாரக்குறைப்பு போன்றன அதில் உள்வாங்கப்பட்டன. ஒருவரால் இரு முறைக்கு அதிகமாக ஜனாதி பதியாக பதவி வகிக்க முடியாது, இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது போன்ற அரசியல் தீர்மானங்களும் அதில் காணப்பட்டன. எனவே 1978ஆம் ஆண்டிலிருந்து காணப்பட்ட இரட்டைப் பிரஜா உரிமை 20 இல் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :