முடக்கப்பட்டது பொத்துவில் பிரதேசம்


இர்ஷாத் ஜமால்-

ம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தின் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளது. கிராம சேவகர் பிரிவுகளான P/03 மதுரஞ்சேனை, P/11, வட்டிவெளி, கிறவல் குளி, P/23, கோமாரி i மற்றும் P/26 ஹிஜ்ரா நகர் (ஜெய்க்கா வீட்டுத்திட்டம்) ஆகிய பகுதிகளே முடக்கப்பட்டுள்ள பகுதிகளாகும்.

குறித்த பிரிவுகளில் வசிப்பவர்கள் இதர பிரிவுகளுக்கு செல்வதும், இதர பிரிவுகளில் வசிப்பவர்கள் குறித்த பிரிவுகளுக்கு செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசங்களில் இருந்து பெஹலியக்கொட பொது மீன் விடற்பனை நிலயத்திற்கு மீன் எடுத்துச் சென்ற அறுவர் மீது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது, அவர்களில் ஐவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளது ஊர்ஜிதப்படுத்தப்பட்டதன் பின்னரே குறித்த பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விழிப்புணர்வு அறிவித்தல், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் என்பன மதஸ்தலங்கள் வாயிலாக அறிவிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த நடவடிக்கைகளை பொத்துவில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி Dr.AU சமட், தவிசாளர் MSA. வாஸீத் மற்றும் பாதுகாப்புப் படையினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :