M.I.இர்ஷாத்-
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
விஜேதாஸ ராஜபக்ச பகிஸ்கரிப்பு செய்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று காலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விஜேதாஸ எம்.பி தவிர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
20ஆவது திருத்த யோசனைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்.
அமைச்சரவை பங்கீட்டிலும் விஜேராஸ ராஜபக்சவுக்கு முதன்மை இடம் வழங்காத நிலையில் அதுகுறித்து அதிருப்தியிலிருந்த அவர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி தலைமையில் இதுவரை நடைபெற்ற கூட்டங்களை பகிஸ்கரித்து வந்தார்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற 20ஆவது திருத்தம் குறித்து பிரதமரின் தெளிவுபடுத்தல் கூட்டத்தையும் விஜேதாஸ ராஜபக்ச பகிஸ்கரிப்பு செய்திருப்பதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பின் புதிய திருத்த யோசனைக்கு எதிராக ஆளுங்கட்சியிலுள்ள மேலும் சில முக்கியஸ்தர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவந்த போதிலும் ஓரளவுக்கு அந்த எதிர்ப்பலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச தாம் எடுத்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment