J.f.காமிலா பேகம்-
தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக்கோரி முன்னாள் அமைச்சரும் நடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட்டின் சட்டத்தரணி இந்த மனுவை இன்று காலை தாக்கல் செய்திருக்கின்றார்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த மன்னார் மாவட்ட மக்கள் சென்று வாக்களிப்பதற்காக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகளை அவர்களுக்காக வழங்கிய குற்றச்சாட்டு ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை, அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவரைக் கைது செய்வதற்கான உத்தரவினை சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று முன்தினம் உத்தரவளித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை கைது செய்வதற்கு 06 பொலிஸ் படை அமைக்கப்பட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இரண்டு நாட்களாகியும் அவர் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment