சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியஇறுக்கமான போக்குவரத்துச் சேவைகள்


பைஷல் இஸ்மாயில் -

நா
ட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் - 19 இரண்டாம் கட்ட பரம்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் அரசும், சுகாதாரத் துறையினரும் பாரிய முன்னெடுப்புக்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன.

அதற்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிராந்தியத்தில் கொவிட் 19 வைரஸ் பரம்பலைத் தடுக்கும் இறுக்கமான சுகாதார நடவடிக்கைகளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தலைமையின் கீழ் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மிக முக்கியமாக அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது அலுவலக மற்றும் அத்தியவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக போக்குவரத்து பிரயாணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு போக்குவரத்துப் பிரயாணம் மேற்கொள்கின்றவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மாத்திரமே பிரயாணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிற அதேவேளை அவர்களின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு, சன்டைசர் செய்யப்பட்ட பின்னர் பிரயாணிகள் பஸ்ஸினுள் அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் சமூக இடைவெளியும் பேணப்பட்டு அதற்கு ஏற்றவாறு ஆசனங்களில் அமர்த்தப்படுகின்றனர்.

இந்த இறுக்கமான சுகாதார போக்குவரத்து நடைமுறைகளை தனியார் பஸ் போக்குவரத்து பைறூஸ் நிறுவனம் அனைத்து பஸ் சேவைகளிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற மாவட்ட முழுச் சேவைகளிலும் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :