மட்டக்களப்பு - கொழும்பு பிரதான நெடுஞ்சாலையில் சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் கடந்த ஞாயிறு இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - கார் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தன்னாமுனை , விபுலானந்தா புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஞானசிங்கம் ஜீவானந்தம் என்பவரே இவ்வாறு பரிதாபகரமான முறையில் உயிரிழந்தவராவார்.
கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காரும் மட்டக்களப்பிலிருந்து ஏறாவூருக்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகள் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment