நாளை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்.

காரைதீவு சகா-

நாளை ஞாயிறுக்கிழமை (11) இடம்பெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்சை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பரீட்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி பரீட்சை நாளை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். 
பகுதி 1, மு.ப. 09.30 - 10.30 மணிவரையும் 
பகுதி 2, மு.ப.11.00 - மதியம் 12.15மணி வரையும் இடம்பெறும்.

இம்முறை பரீட்சைக்கு முதல் முறையாக பரீட்சை அனுமதி அட்டை (Admission card)வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். பரீட்சாத்திகளை அழைத்து வரும் பெற்றோர் பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

இடைவேளை நேரத்திலும் இவர்களின் பெற்றோருக்கு பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. இது தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை-புதியநடைமுறைகள்.!

இம்முறை தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்க்காக அனுமதிஅட்டை(Admission card) முதன்முறையாக பரீட்சைத்திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வனுமதி அட்டையில் பரீட்சை எண் மற்றும் விண்ணப்பதாரி பரீட்சை எழுத வேண்டிய பரீட்சை நிலையம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரைகாலமும் அப்படியான அனுமதிஅட்டை க.பொ.த. சா.தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு மாத்திரமே பாடசாலை மாணவர்க்கு வழங்கப்பட்டுவந்தது.தரம் 5புலமைப்பரிசில் மாணவர்க்கு இதுவரை அனுமதிஅட்டை முறைமை அமுலில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து..

இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டை பரீட்சைக்கு முகங்கொடுக்கும் போது கொண்டு வருவது கட்டாயம் அல்ல. ஒரு விண்ணப்பதாரி பரீட்சை அனுமதி அட்டையை காண்பிக்காதவிடத்து பாடசாலை மூலம் வழங்கப்படும் வருகை ஆவணத்தை கொண்டு பரீட்சகரின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டு பரீட்சை எழுத அனுமதிக்கப்படும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :