மஸ்கெலியாவில் ஆண் குழந்தையொன்று பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பலி


க.கிஷாந்தன்-

ஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, டீசைட் தோட்டத்தில் மேல் பிரிவில் ஆண் குழந்தையொன்று வீட்டின் அருகாமையில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பலியாகியுள்ளது. இத்துயர் சம்பவம் இன்று (9) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒன்றரை வயதுடைய பிரசாத் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல்போனதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் தேடியுள்ளனர். குழந்தையை விளையாட விட்டுவிட்டு வீட்டார் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள சுமார் மூன்றடி ஆழமான கிணற்றில் குழந்தை விழுந்து கிடப்பதை கண்ட, குழந்தையின் தாத்தா கூச்சலிட்டதை தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள் ஓடி வந்து குழந்தையை மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளது.

சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :