பொது சுகாதார விதிமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும்.இதனை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம் . -பணிப்பாளர் ஜி .சுகுணன்

எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை தற்போது கோரோனா தொற்றுக்கு உள்ளவர்களாக 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுள் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள் என அறியப்பட்ட 8 பேரும், வெளிநாடு ஒன்றில் இருந்து வருகை தந்த நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் சகோதரிக்கும் என 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன்  கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே வைத்திய பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில், பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட 33 நபர்களை நாம் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். இவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது இதில் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 3 நபர்களும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 5 நபர்களும் அடங்குகின்றனர். மக்களின் நடமாட்டம் குறைக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ஒன்றுகூடல்கள் ,முற்றாக தடை செய்யப்ட்டுள்ளதுடன்
போது மேலும் சமய நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளோம்
தோற்றுக்குள்ளானவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பிரதேசத்தில் அமைந்துள்ள கொவிட் 19 சிகிச்சை முகாம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது நெருங்கிய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 129 பேரை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

மேலும் பொது மக்கள் தொடர்ந்து பொது சுகாதார விதிமுறைகளை மிகவும் இருக்கமாக கடைபிடிக்க வேண்டும் இதனை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம் என்றார் .


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :