அம்பாறையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து கல்முனை விரைந்தார் ஹரீஸ்..



நாட்டில் கொரோன வைரசின் பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் பரவி வரும் நிலையில் இன்று (24) அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொத்துவில் ஆகிய இடங்களிலும் பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஷ் கல்முனை விரைந்துள்ளார்.
அத்துடன் இதன் தாக்கம் மக்களிடையே மேலும் அதிகரிக்காமல் தடுக்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சர் மற்றும் இது தொடர்பிலான உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார் என்பதோடு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் கடந்த காலங்களில் எவ்வாறான மக்கள் தொடர்பில் இருந்துள்ளார்கள் என்ற விடையஙகளை தாமதமின்றி வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த கொரோனா வைரஸ் பரவலை குறைக்க எமது இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உரிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி எமது பிரேதசத்திலிருந்து இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :