தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு அருகாமையிலுள்ளவர்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம்..

ஐ. ஏ. காதிர் கான்-


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உள்ள வீடுகளின் அருகாமையில் வாழும் மக்கள், தேவையற்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹெமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் (26) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உள்ள வீடுகளுக்கு அருகாமையில் உள்ளவர்கள் தேவையற்ற பீதியையோ, சந்தேகத்தையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். 

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர், தொற்று நோய்க்கு உள்ளானவர்கள் அல்ல. நோய்க்கு உள்ளாகியிருந்தால், அவ்வாறான அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிப்போம் அல்லது அழைத்துச் செல்வோம். 

இந்த நோய் தொடர்பில் முதல் தொற்றுக்கு தொடர்பானவர்கள் (first contact) மாத்திரமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் உரிய முறையில் வீடுகளில் இருந்து வெளியே செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருந்து தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதுவே பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :