ஊடகங்களுக்கு வருமானத்தில் பங்கு கூகுள் அதிரடி



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
டகங்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் வெளியிடும் செய்திகளை கூகுள், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு பெரும் வருமானம் ஈட்டி வருகின்றன. ஆனால், பெரும் வருமானத்தை ஈட்டிவிட்டு ஊடகங்களுடன் வருமானத்தை பகிர்ந்து கொள்வதில்லை என டிஜிட்டல் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
.இதற்காக அவுஸ்திரேலியா அண்மையில் ஒரு பிரேரனையை தாக்கல் செய்தது. அதில், டிஜிட்டல் நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. இதை பேஸ்புக் நிறுவனம் கடுமையாக எதிர்த்தது. வருமானத்தை பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக அவுஸ்திரேலியாவின் செய்திகளையே பயன்படுத்தப் போவதில்லை என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது.

எனினும், சிறு சிறு மாற்றங்களுடன் புதிய சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.

இதற்கேற்ப அவுஸ்திரேலியா அரசாங்கமும் மாற்றங்களை கொண்டுவர ஒப்புக் கொண்டுள்ளது. ஊடகங்கள் செய்திகளை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிட ஏராளமான பணத்தை செலவிடுகின்றன. எனவே, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பங்கு வேண்டுமென்பதே ஊடக நிறுவனங்களின் கோரிக்கை.
இந்நிலையில், அடுத்த 3 வருடங்களில் உலகம் முழுவதும் இருக்கும் செய்தி நிறுவனங்களுக்கு வருமானத்தில் பங்கு செலுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் 1ம் கட்டமாக, ஜேர்மனியில் கூகுள் நியூஸ் ஷோகேஸ் ( google news showcase ) என்ற புதிய தளத்தை கூகுள் அறிமுகப்படுத்தும் என்று கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்பாபேட்டின் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்தத் தளம் இந்தியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதை பயன்படுத்த ஏராளமான செய்தி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதன் மூலம் ஊடகங்களுக்கு வருவாயில் பங்கு கிடைக்கும். அடுத்த 3 வருடங்களில் மட்டும் $1 Billion ( சுமார் 18,400 கோடி ரூபா ) ஊடகங்களுக்கு கூகுள் நிறுவனத்தின் வருமானத்தின் பங்காக வழங்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :