சிறையிலிருந்து வெளியாகிய இளம் பெண்ணொருவர் 102 கிராம் கேரளா கஞ்சாவுடன் மீண்டும் பொலிஸாரினால் கைது.எப்.முபாரக்-
சிறையிலிருந்து வெளியாகிய இளம் பெண்ணொருவர் 102 கிராம் கேரளா கஞ்சாவுடன் இன்று(2) மீண்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூனிட் 07,முள்ளிப்பொத்தானை, பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரான பெண் திருகோணமலை சிறைச்சாலையில் இரண்டு கிலோ கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவருடம் சிறைதண்டனை அனுபவித்துவிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னல் பிணையில் விடுதலையான நிலையிலே மீண்டும் 102 கிராம் கேரளா கஞ்சாவை சிறிய மேசையொன்றின் அடிப்பகுதியில் சூட்சகமான முறையில் மறைத்து வைத்திருந்த நிலையில் குறித்த சந்தேக நபரான பெண் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 102 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக கந்தளாய் போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரான குறித்த பெண்ணை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :