விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கு இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரம் பற்றிய தெரிவுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றபோது ரிஷாட் பதியூதீன் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை பற்றி ஆராயப்பட்டது.
இதனையடுத்தே இன்று நடைபெறும் சபை அமர்வில் கலந்துகொள்ள அவருக்கு சந்தர்ப்பம் அளிப்பதற்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment