அரசு அறிவித்த விலைச்சலுகையால் 7நாட்களாக கல்முனையில் வெள்ளைச்சீனிக்குத் தட்டுப்பாடு!


காரைதீவு சகா-

ரசாங்கம் அறிவித்த சில உணவுப்பொருட்களுக்கான விலைச்சலுகை இன்னும் மக்களை வந்தடையவில்லையென குற்றம் சாட்டப்படுகின்றது.

சீனி வெங்காயம் மீன்ரின் போன்ற உணவுப்பொருட்களுக்கான விலைக்குறைப்பு பற்றி உரியஇடங்களில் அறிவிக்கப்பட்டபிற்பாடும் அதற்கான நீதி கிடைக்கப்பெறவில்லையென மக்கள் கூறுகின்றனர்.
சதொச மற்றும் பூட்சிற்றி போன்ற இடங்களில் சில நாட்களில் ஒருசில மணிநேரம் புதியவிலைக்கு விற்கப்பட்டதாகக்கூறப்படுகிறது.

ஆனால் மக்கள் சென்று கேட்டால் இன்னும் வரவில்லையென்று பதில் அளிக்கப்படுகிறது.
தனியார் கடைகளில் வெள்ளைச்சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. சிலகடைகளில் இல்லையென்றெ சொல்லப்படுகிறது.

அரசாங்கத்தின் விலைக்குறைப்பை அனுபவிக்கமுடியாதவர்களாக மக்கள் திண்டாடுகின்றனர்.
சிலவேளை விலை அதிகரித்தால் மறுகணம் கூட்டிவிற்பார்கள். ஆனால் குறைத்தால் ஒருவாரம் செல்லும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :