ஹக்கீம், சஜீத் உறுப்பினர்களை நீக்குமாறு சஜித்திற்கு கடிதம்...


J.f.காமிலா பேகம்-

20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு எதிராக உடனடி நடவக்கை எடுக்கும்படி அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடிதமொன்றை கட்சியின் பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமமே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளாகிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சிலரும் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ ,நளின் பண்டார, ஹெக்டர் அப்புஹாமி, சுஜித் பெரேரா, நிரோஷன் பெரேரா, மயந்த திஸாநாயக்க, முஜிபுர் ரஹ்மான், ரோஹினி விஜேரத்ன, கின்ஸ் நெல்சன் ஆகியோர் இணைந்து கட்சி பொதுச் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

அவர்களைக் கட்சிக்குள் வைத்திருப்பதா அல்லது வெளியேற்றுவதா என்பது பற்றி மிகவிரைவில் முடிவொன்றை எடுக்கும்படியும் குறித்த உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :