கல்முனை பிரதேச செயலகத்தில் இதுவரையில் இயங்கிவந்த களஞ்சியசாலையினை புதுப் பொலிவுடன் நவீனமுறையில் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீரின் ஆலோசனைக்கு அமைவாக கணக்காளர் வை.ஹபிபுல்லாவின் முழு முயற்சியினாலும், அர்ப்பணிப்பினாலும் ஸ்மாட்(Smart) வடிவமைப்பில் நேர்த்தியாக மிகக்குறைந்த செலவில் கழிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு திருத்தியமைக்கப்பட்ட களஞ்சியசாலை இன்று(9)பிரதேச செயலாளர் எம்.எம் நஸீரினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.நஜீம்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம் கலீல்,நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன்,பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் வாபா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment