திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூடக்குடா பிரதேசத்தில் கடற்படை முகாமிற்கு அருகாமையில் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 தோட்டாக்கள் அகழ்தெடுக்கப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு(8) சம்பூர் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவ் தோட்டாக்கள் 110 மீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அகழ்தெடுக்கபட்ட தோட்டாக்கள் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுபவை எனவும் இவை கடற்கலங்களுக்கு எதிராகவும் பாவிக்க முடியும் என சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தோட்டாக்கள் புதைக்கப்பட்ட இடம் யுத்தகாலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படை தளம் இருந்த இடம் எனவும் அவர்களே தோட்டாக்களை புதைத்து வைத்திருக்க கூடும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்டதாக தோட்டாக்களை நீதிமன்ற உத்தரவை பெற்று விக்ஷேட அதிரடிப்படையின் உதவியுடன் செயழிழக்க உள்ளதாக சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment