இச்சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, புதிய அரசியலமைப்பொன்று உருவாக்குவதாக இருந்தால், தமிழ் மக்களின் அனைத்துப்பிரச்சினைக்கான தீர்வினையும் உள்ளடக்கியதாகவே அது அமைய வேண்டும் என்பதில் தான் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அனைவரும் அதீத கரிசனை கொண்டிருப்பதாக சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ “புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதில் அதிக அக்கறை கொண்டிருக்கின்றோம். அத்துடன் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது நிச்சயமாக தமிழர்களின் விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அமையும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதேநேரம், புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் தமிழ்த் தரப்பினது பங்களிப்பு தொடர்பிலும் தன்னிடமுள்ள எதிர்ப்பார்ப்புக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ சுமந்திரனிடம் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment