HNDE ஆங்கில உயர் டிப்ளோமாதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளக் கோரிக்கை



சில்மியா யூசுப்-
லங்கை உயர் நுட்ப கல்வி நிறுவனத்தில் பயின்ற ஆங்கில உயர் டிப்ளோமா தாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளக் கோரிக்கை விடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான மகரூப்
HNDE ஆங்கில உயர் டிப்ளோமா தாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள ஆவனம்் செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் வேண்டிக் கொண்டார்.

செயலாளர் ஐ கே ஜி முத்துபன்டாவை அண்மையில் சந்தித்து திருகோணமலை மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியபோதே இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

டிப்ளோமாதாரிகளுக்கான நியமனம் நீண்டகாலமாக வழங்கப் படாமை இருப்பதனால் ஆங்கில உயர் டிப்ளோமா சான்றிதழ் பெற்றோர் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து நீண்ட காலமாக கிடைக்காமல் இருக்கும் தமக்கான நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கோரிக்கையை கல்வி அமைச்சின் செயலாளரிடம் முன் வைத்தார்,
அத்தோடு இது குறித்து தான் நடவடிக்கை எடுப்பதாக இதன் போது கல்வி அமைச்சின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினரிடம் உறுதி அளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :