நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா -
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரொடக் டிவிசனில் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இழக்க்காகியதையடுத்து தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபபட்டனர்
ஏழாம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பரித்துக்கொண்டிருந்தவர்கள் மீதே மரத்திலிருந்த குளவி கூடு கலைந்து கொட்டியுள்ளது
இன்று 07 காலை 09.30 மணியளவில் குளவிகள் கொட்டியதையடுத்து 08 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்பட்டர்
இதனையடுத்து தொழுந்து பரித்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டதுடன் தேயிலை மலைப்பகுதிகளிலுள்ள குளவி கூடுகளை நெருப்பு வைத்து புகை எழுப்பி விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்
பொகவந்தலா கம்பனியின் லெதண்டி குரூப்பின் கீழ் இயங்கும் புரொடக் டிவிசன் தேயிலை மலைகள் காடாகி கிடப்பாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியதுடன் அச்சத்தின் மத்தியிலே தாம் வேலைக்கு செல்வதாக தெரிவித்ததுடன் தோட்ட நிர்வாகம் தேயிலை மலைகளை துப்பரவு செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்
0 comments :
Post a Comment