நூருல் ஹுதா உமர்-
ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கடலோர கரையோரம் பேணல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த இடத்தின் நிலவரம் மற்றும் பிரதேச மக்களின் அச்சம் நிலைமை குறித்தும் விபரித்து கூறியதுடன் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனையெடுத்து,கடலோர கரையோரம் பேணல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறித்த ஒலுவில் பிரதேசத்திற்கு தான் குழுவொன்றினை அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்கவும் அதன் பின்னர் நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக கடலோர கரையோரம் பேணல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த வியாழக்கிழமை (03) கடலோர கரையோரம் பேணல் திணைக்களத்தின் உயர்மட்ட குழுவொன்று ஒலுவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்து கடலரிப்பு பிரதேசத்தை பார்வையிட்டு பணிப்பாளர் நாயகத்திற்கு அறிக்கை செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பணிப்பாளர் நாயகத்தை தொடர்பு கொண்ட போது, குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதாகவும் அதனடிப்படையில் ஒலுவில் கடலரிப்பை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் பணிப்பாள்ர் நாயகம் உறுதியளித்துள்ளார்.
0 comments :
Post a Comment