அமெரிக்க நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா, ரஷ்யா, ஈரான் சதி திட்டம் - அமெரிக்கா குற்றச்சாட்டு



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

மெரிக்காவில் November மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சீர்குலைக்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

வெள்ளை மாளிகையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் ஓ பிரையன் ( Robert C. O'Brien ) இதுபற்றி அவர் கூறியதாவது:-

November மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்து புலனாய்வுப் பிரிவு தெளிவுபடுத்தி இருப்பது என்னவென்றால் தேர்தலில் சீனாவின் தலையீடு இருக்கும்; அது அமெரிக்காவை அரசியல் ரீதியாகப் பாதிக்கும் மிகப்பெரிய திட்டத்தை கொண்டுள்ளது; என்பதாகும். ஆனால் சீனா மட்டுமல்ல ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளும் உள்ளன. இந்த 3 நாடுகளும் நமது தேர்தலை சீர்குலைக்க முயலும் எதிரி நாடுகளாகும்.

அவர்களில் சிலர் ஜோ பைடனை விரும்புகிறார்கள். சிலர் தற்போதைய ஜனாதிபதியை விரும்புகிறார்கள் என்று கூறப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் அந்த நாடுகள் எதை விரும்புகின்றன என்பது முக்கியமல்ல. அமெரிக்காவின் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் தலையிட முயற்சிக்கும் எந்த ஒரு நாடும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

அமெரிக்காவின் தேர்தல்களில் தலையிட முயற்சிக்கும் எவரும் அசாதாரண விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனர்கள், ரஷ்யர்கள், ஈரானியர்கள் மற்றும் பிறருக்கு நாங்கள் வெளிப்படையாக தெளிவுபடுத்தியுள்ளோம்.

எங்கள் தேர்தலின் புனிதத்தை பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யப்போகிறோம். அதுவே நமது ஜனநாயகத்தின் அடித்தளம். அதுவே எங்களை அமெரிக்கா ஆக்குகிறது. எங்கள் தேர்தலில் தலையிட முயற்சிக்கும் மற்ற நாடுகளை நாங்கள் பொறுத்து கொள்ளப் போவதில்லை என கூறினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :