சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் தோப்பூர் றியல் பைட்டர்ஸ் அணி வெற்றி.

எஸ்.அஷ்ரப்கான்-


சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் தோப்பூர் றியல் பைட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

தோப்பூர் றியல் பைட்டர்ஸ் மற்றும் மூதூர் வெஸ்ரன் வோரியஸ் அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டி அண்மையில் தோப்பூர் மைதானத்தில் இடம் பெற்றது.

40 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இக்கடின பந்து கிரிக்கெட் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய றியல் பைட்டர்ஸ் அணியினர் 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் பஸ்ரின் 50 ஓட்டங்களையும், ஹிஸாம் 51ஓட்டங்களையும், றிபான்57 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

264 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெஸ்ரன் வோரியஸ் அணியினர் 39.3 பந்துகளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி கண்டது.

தோப்பூர் றியல் பைட்டர்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் தாம் தொடர்ச்சியாக விளையாடிய போட்டிகளில் எட்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :