கல்முனை ஜும்மாபெரிய பள்ளியிலும், நாகூர் ஆண்டகை தர்காவிலும் விசேட துஆ பிரார்த்தனை : றிசாத் ஷரீபின் தலைமையில் அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.




நூருல் ஹுதா உமர்-

டந்த பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரசுக்கு வாக்களித்த கல்முனை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் விசேட துஆ பிரார்த்தனையும் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து கடந்த பொதுத்தேர்தலின் தேசிய காங்கிரஸ் வேட்பாளரும் பிரபல உயிரியல் பாட ஆசிரியருமான றிசாத் ஷரீபின் தலைமையில் கல்முனை முஹையத்தின் ஜும்மாபெரிய பள்ளியிலும், வரலாற்று சிறப்பு மிக்க கல்முனை நாகூர் ஆண்டகை தர்காவிலும் நடைபெற்றது.
கடந்த பொதுத்தேர்தலின் தேசிய காங்கிரஸ் வேட்பாளரும் பிரபல உயிரியல் பாட ஆசிரியருமான றிசாத் ஷரீபின் ஏற்பாட்டிலும், தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இங்கு உரையாற்றிய ஏ.எல்.எம். அதாஉல்லா கல்முனை பிரதேச மக்களின் சமகால பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் மற்றுமின்றி பிரதேசத்தின் நலன் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கப்போவதாக உறுதியளித்தார்.
மேலும் இங்கு தேசிய காங்கிரசின் கலாச்சார, மதவிவகார செயலாளரும் கல்முனை மத்தியகுழு உப தலைவருமான மௌலவி உஸ்தாத் சபா முஹம்மத் (நஜாஹி) அவர்களினால் விசேட துஆ பிராத்தனையும் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, தேசிய அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம்.ஷியா, தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், தேசிய இணைப்பாளர் எஸ்.எம். சபீஸ், கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்லவில் குதிரை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை முஹையத்தீன் ஜும்மா பள்ளி பிரதம மரைக்காயர் உட்பட சபை உறுப்பினர்கள், தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், கல்முனை வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :