2019 ஆம் ஆண்டு அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் தொடர்பான உதவி அரசாங்கப் பகுப்பாய்வாளர் (Government Examiner of questioned document -Government Analyst's Department) பதவிக்கான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் ஒலுவிலை பிறப்பிடமாக கொண்ட ஜீஸான் முகம்மட் தேர்வாகியுள்ளார்.
ஒலுவில் முதலாம் பிரிவில் வசிக்கும் ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை ஊழியர் ஐ.எல் பதுறு சாஹிபு-கே.கைறுன் நிஸா தம்பதிகளின் மூன்று பிள்ளைகளில் 27 வயது நிரம்பிய ஜீஸான் முகம்மட் இரண்டாவது செல்வப் புதல்வன்.தனது ஆரம்ப கல்வியை அக்/அல்-ஹம்றா மகா வித்தியாலயத்திலும்,உயர் கல்வியை நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையிலும் பல்கலைக்கழக கல்வியை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீட பௌதீக பிரிவில் விசேட தரம் வரை பயின்றவராவார். அதேவேளை பௌதீக பிரிவில் Demonstrator ஆகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் தேசிய ரீதியாக நடைபெற்ற குறித்த போட்டிப் பரீட்சையில் தேர்வு செய்யப்பட்ட, நான்கு தமிழ் பேசும் நபர்களுள் ஒரே ஒரு முஸ்லிம் சமூகம் சார்ந்தவராக ஜீஸான் முகம்மட் காணப்படுவதுடன் ,தனது சொந்த மண்ணில் இத்துறையில் தடம்பதிக்கும் முதல் உத்தியோகத்தராகவும் திகழுகிறார்.அத்தோடு இவர் தனது குடும்பத்திற்கும்,பிறந்த மண்ணுக்கும் இதனூடாக பெருமை சேர்த்துள்ளார் எனலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment