தமிழ் தரப்பிடமிருந்து முஸ்லிம் தலைமகள்பாடம் கற்பார்களா ?


முகம்மத் இக்பால், சாய்ந்தமருது-


நினைவு தினத்தை தடுத்த அரசுக்கெதிராக போராட தயாராகும் தமிழ் தரப்பிடமிருந்து முஸ்லிம் தலைமகள் பாடம் கற்பார்களா ?

யாழ்ப்பான பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவனாக இருந்த திலீபன் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். அவர் 1987 இல் விடுதலை புலிகளின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து வீரமரணமடைந்தார்.

இவ்வருடம் தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு அரசாங்கம் தடை விதித்ததனை கண்டித்து அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க முயற்சித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் திலீபனின் நினைவு தினத்தை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அனுஷ்டித்து வந்தனர். அதுபோல் இந்த வருடமும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்தபோது அரசாங்கம் அதற்கு எதிராக தடை விதித்துள்ளது.

இது ஒரு சாதாரண விடயம் என்று தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் மூலையில் ஒதுங்கிவிடவில்லை. மாறாக தடை விதித்த அரசாங்கத்தை கண்டித்து வடகிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் போராட்டத்தை நடாத்த ஆயத்தமாகி வருவதனை காணக்கூடியதாக உள்ளது.

இதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வேலைதிட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அவர்கள் வகித்துவந்த “தமிழ் மக்கள் பேரவை” யின் இணை தலைவர் பதவியை ராஜினமா செய்து ஒற்றுமைக்கான தனது நல்லென்னத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

“இது ஒரு நினைவுநாள் அனுஸ்டிப்புதானே ! இந்த சிறிய விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்படுவதா” என்று தமிழ் தரப்பினர் எவரும் சிந்திக்கவில்லை. இன்று இவ்வாறான விடயங்களில் மௌனமாக இருந்தால் அல்லது விட்டுக்கொடுத்தால் நாளைக்கு இன்னும் பல உரிமைகளை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் என்றுதான் சிந்தித்தார்கள்.

ஆனால் இதுபோன்றதொரு நிலைமை முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டால் ? சில அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு அறிக்கை மட்டும் வழங்குவர், பெரும்பாலான அரசியல்வாதிகள் மௌனமாகிவிடுவர்.

இந்த நிலையில் அரசியல்வாதிகளின் அல்லக்கைகளோ, நாங்கள் வாய்மூடி மௌனமாக இருப்போம் என்றும், நமக்கு எதற்கு வீண் வம்பு என்றும், அமைதியாக இருப்பதே வெற்றியை தரும் என்றும் தங்களது கோளைத்தனத்தினை வெளிப்படுத்துவர்.

அத்துடன் உரிமைகளை பறிக்க முயற்சிக்கின்ற அரசாங்கத்தை துணிச்சலுடன் உணர்வுபூர்வமாக கண்டிக்கின்றவர்களை ஏளனம் செய்வர். இவ்வாறு துணிச்சல் உள்ளவர்களை மட்டம்தட்டுவதானது புறமுதுகு காட்டி ஓடுகின்ற கோழைகளின் செயல்பாடாகும். இவ்வாறான நயவஞ்சகர்கள் இருக்கும் வரைக்கும், எமக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளையும் நாளடைவில் ஒவ்வொன்றாக இழக்க நேரிடும்.

எனவேதான் தங்களது உரிமைகளை பறிக்க முற்படுகின்ற ஆதிக்க சக்திகளை எதிர்த்து அகிம்சை வழியில் போராடுகின்ற சகோதர தமிழ் அரசியல் தலைமையிடமும், தமிழ் மக்களிடமும் எமது முஸ்லிம் அரசியல்வாதிகளும், அவர்களது அல்லக்கைகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :