செசெப் அனுசரனையில் மருதமுனை பாடசாலைகளில் உள்ள தரம் ஐந்து மாணவர்களுக்கு மாதிரி மதிப்பீடு



நூருள் ஹுதா உமர்.
ல்முனை கல்வி வலய, கல்முனை கோட்டத்திற்குட்பட்ட மருதமுனை பிரதேச பாடசாலைகளில் உள்ள தரம் ஐந்தில் கல்விபயிலும் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதிரி மதிப்பீடு இன்று மருதமுனை பாடசாலைகளில் நடைபெறுகிறது.
மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான (SESEF) ஒத்துழைப்பு அமைய அனுசரணையில் நடைபெறும் இம் மாதிரி மதிப்பீட்டு வினாத்தாள்களை நேற்று (20) இரவு அவ்வமையத்தின் தலைவரும் ஊவா வெல்லச பல்கலைக்கழக பதிவாளருமான எம்.எப் ஹிபத்துள் கரீம் கல்முனை கோட்ட கல்வி அதிகாரி பீ. எம். பதுர்தீனிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் அமையத்தின் செயற்பாட்டு பணிப்பாளரும், உள்ளுராட்சி மன்றங்களின் செயற்திட்ட ஆலோசகருமான எம்.ஐ.எம். வலீத், அமையத்தின் நிதிப்பணிப்பாளரும், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப்பதிவாளருமான எம்.எப். மர்சூக், தென்கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவரும், அமைப்பின் கல்வி துறை சார்ந்த விடயங்களுக்கான பணிப்பாளருமான கலாநிதி ஏ. ஏ. நுபைல், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், அமைப்பின் சமூக வலுவூட்டலுக்கான பணிப்பாளருமான ஏ.எம். றியாஸ் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டு இவ்வினாபத்திரங்களை கையளித்தனர்.
மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த ஏழு பாடசாலைகளில் இருந்து சுமார் 450 மாணவர்கள் இம்மாதிரி மதிப்பீட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :