தொழிலுக்கு சென்று வீடு திரும்பும் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் வயோதிபர்கள் கடும் சிரமங்களையும் அனுபவித்து வந்தனர்.
இரவு வேளைகளில் அவசர மருத்துவ தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளை செய்வதற்கு வெளியில் செல்ல முடியாத நிலைமையில் பெரும் சவாலுடன் வாழ்ந்து வந்தனர்.
இந்த விடயம் சம்பந்தமாக பல அரசியல் தலைவர்களிடம் முறையிட்டும் எந்தவித பயனும் கிடைக்காது இப்பகுதி மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வந்தனர். கடந்த பொதுத் தேர்தலின் போதும் பல அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தை சரி செய்து தருகிறோம் என்று சொல்லியும் யாருமே எந்த நடவடிக்கையும் எடுக்காது வந்தனர்.
இந்த விடயம் சம்பந்தமாக கலாநிதி வி. ஜனகனின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் இதற்குரிய நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்குமாறும் கேட்கப்பட்டது.
இவ்விடயத்தை அறிந்த கலாநிதி வி. ஜனகன் உடனடியாக அந்தப் பகுதிக்குத் தேவையான மின் விளக்குகளைப் பொருத்தி அந்த பிரதேசத்திற்கும் அம் மக்களுக்கும் ஒளியூட்டியுள்ளார்.
இந்த வேலைத்திட்டம் சரியாக இடம்பெற்றுள்ளதா என்று கலாநிதி வி. ஜனகன் நேரில் சென்றும் பார்வையிட்டதுடன் அப்பகுதிக்கு விஜயம் செய்த கலாநிதி வி. ஜனகனுக்கு அப்பகுதி மக்கள் நன்றியினையும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment