22 வதுகொடகே தேசியச் சாகித்திய விருது விழா- 2020 எதிர்வரும் 2020 செப்டம்பர் 10-ஆம் திகதி வியாழக்கிழமை பி. ப. 3.00 மணிக்கு, கொழும்பு - 07, இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
இவ்விழாவில் பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு, பேராசிரியர் சுனந்த மஹேந்திர, எழுத்தாளர் எஸ். முத்துமீரன் ஆகியோர் சிங்களம், ஆங்கிலம், தமிழ் மொழியிலான இலக்கிய வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாகக் கொடகே வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்படும்.
மேலும் 2019 ஆண்டு சிங்களம், தமிழ் ஆங்கிலம் மொழிகளில் வெளிவந்த நூல்களில் சிறந்த நூல்களுக்குக் கொடகே தேசியச் சாகித்திய விருதுகள் வழங்கப்படும்.
0 comments :
Post a Comment