எச்.எம்.எம்.பர்ஸான்-
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா வியாழக்கிழமை (03) விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த கோட்டத்திலுள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம், சரீப் அலி வித்தியாலயம், பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயம், சாதுலியா வித்தியாலயம், மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த பாடசாலைகளில் கட்டப்படும் புதிய கட்டிடங்களை துரிதப்படுத்திக் கொடுக்குமாறு ஒப்பந்தக்காரர்களிடம் வலயக் கல்விப் பணிப்பாளர் வேண்டிக் கொண்டார்.
அத்தோடு, பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை அதிபர்களுடன் கேட்டறிந்ததுடன் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.
குறித்த விஜயத்தின் போது பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் கல்வி வலய தொழிநுட்ப உத்தியோகத்தர் கே.யோகானந்த கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment