நிந்தவூரில் மாபெரும் வர்த்தக கண்காட்சியும் விற்பனையும்.

நூருல் ஹுதா உமர், பைசால் இஸ்மாயில்-


நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட அஸ்ரப் சதுக்கத்தில் கேப்சோ (GEFSO) அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் நேற்று (26) மாலை கேப்சோ அமைப்பின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்தாத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ .எம்.எல். பண்டாரநாயக்கா பிரதம அதிதியாக கலந்துகொண்டு வர்த்தக கண்காட்சியை ஆரம்பித்து வைத்ததுடன் கண்காட்சி கூடங்களையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எல். அப்துல் லத்தீப், ஆசியா பௌண்டஷனின் இலங்கைக்கான பிரதி வதிவிட பிரதிநிதி ஜோகான் ராபர்ட்ஸ், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில், ஆயுர்வேத வைத்திய அத்தியேட்சகர் வைத்தியர் கே.எல்.எம். நக்பர் விசேட அதிதிகளாகவும் கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலிருந்தும் சிங்கள, தமிழ் ,முஸ்லிம் வர்ததகர்களின் கண்காட்சி கூடங்களை கொண்டு அமைந்துள்ள இக்கண்காட்சியானது வர்த்தகத்தினுடாக இன ஒற்றுமையை வலுப்படுத்தும் திட்டமாக அமைந்துள்ளதுடன் சகல துறை சார்ந்த வர்த்தக காட்சி கூடங்களும் இங்கு அமைக்கப்பட்டிருப்பதுடன் நேற்றும் இன்றும் நடைபெற உள்ளது சிறப்பம்சமாகும். இங்கு இன நல்லிணக்க கலை நிகழ்வுகள் நடைபெற்று கலைஞர்களுக்கு கலந்துகொண்டிருந்த அதிதிகளினால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :