J.f.காமிலா பேகம்-
குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் அவசர சேவைகளுக்காக slemb.kuwait@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக அணுக முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment