ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் முக்கியமான தகவல்களை வெளியிட காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பான விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரியையும், ஒக்டோபர் 6ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் விசாரணைக்கு அழைத்திருக்கிறது.
இந்நிலையில் நேற்றைய தினத்தில் சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் பிரதமர் அமரர் பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வின்போது கலந்துகொண்டிருந்த ஒருசில சுதந்திரக் கட்சி மூத்த உறுப்பினர்களுடன் சந்திப்பை நடத்தியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, ஈஸ்டர் தாக்குதல் குறித்த முக்கிய தகவல்களை அம்பலப்படுத்தப் போவதாக கூறியிருக்கின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஒக்டோபர் 6ஆம் திகதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ள ரணில் விக்கிரமசிங்க, பல இரகசியங்களைப் போட்டுடைக்கப் போகின்றார் என்றும் சிறிகொத்த தகவல்கள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment