கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். ஹனி அவர்களின் வழிகாட்டலில்
றகுமானியா கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (03) காலை 9.00 மணியளவில் டெங்கு சிரமதான பணி கிராம உத்தியோகத்தர் ஏ.சீ. அப்துல் பரீட் தலைமையில் இடம்பெற்றது
இதன் போது கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி கலந்து கொண்டு சிரமானப் பணியினை ஆரம்பித்து வைத்தார்
எதிர் வருகின்ற காலம் மழை காலமாக இருப்பதனால் சூழலை சுத்தமாக வைத்திருந்து டெங்கு நுளம்பு பரவாத வகையிலும், டெங்கு நோயிலிருந்து மரணத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் , கடற்கரையோரங்களை சுத்தமாக வைத்திருந்து சூழல் மாசுபடுவதிலிருந்து பாதுகாக்கும் நோக்குடன் கிராம வாசிகளை கொண்டு சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது
குறித்த சிரமதானப் பணி நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.றியாத்,
கிராம உத்தியோகத்தர் ஏ.சீ. அப்துல் பரீட் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.சமீமா சமுர்த்தி உத்தியோகத்தர் கே.எம். உவைஸ், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஈ.நெளபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்கள்.
0 comments :
Post a Comment