மூன்று மடங்காக அதிகரித்த ஹெரோயின் விலை!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் காரணமாக ஹெரோயின் போதைப்பொருளின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில்:-
தற்போதைய நிலையில், ஹெரோயின் குறித்த சோதனைகள் அதிகரித்துள்ளதால் கஞ்சாவின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் , பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனைகளினால் ஹெரோயின் போதைப்பொருளின் விலை உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, அண்மைய நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தைமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :