கத்தார் நாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய தொழிலாளர் சட்டத்தில் ஒரு மாற்றத்தை செய்துள்ளது. இதனை பொதுவாக அங்கு பணிபுரியும் புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்கள் வரவேற்கிறார்கள்.
புதிய சட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை மாற்றுவதற்கு கட்டாரி காஃபில் அதாவது ஸ்பான்சரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியதில்லை, அவர்களின் குறைந்தபட்ச சம்பளம் 1,000 கட்டாரி ரியாலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது மாதத்திற்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய்.
2022 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான அரங்கங்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து சென்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த செய்தியால் நிம்மதியடைந்திருக்க வேண்டும். மனித உரிமைகளுக்கான நிறுவனங்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது தொடர்பான பிரச்சினையை அரசாங்கத்தின் முன்வைக்கின்றன.
"இது தொழிலாளர் சீர்திருத்தத்தின் திசையில் ஒரு பெரிய நடவடிக்கையாகும்" என்கிறார் டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சமூகங்களுக்கான கொள்கை ஆராய்ச்சி மற்றும் அதிகாரமளித்தல் அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் மஹாபீன் பானு.
அவர் பல ஆண்டுகளாக சர்வதேச தொழிலாளர் இடம்பெயர்வு துறையில் பணியாற்றி வருகிறார். " தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சரியான திசையில் கத்தார் செயல்பட்டு வருவதால், அதன் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்" என்று அவர் கூறுகிறார்.
டாக்டர் பானுவின் கூற்றுப்படி, "கத்தாரில் ஊதியம் வழங்கப்படாதது தொடர்பான பல வழக்குகள் உள்ளன. கத்தார் அந்த வழக்குகளை எவ்வாறு கையாளும், ஊதியம் எவ்வாறு வழங்கப்படும் என்பதும் ஒரு சவாலாக இருக்கும்."
கத்தார் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2015 ஆம் ஆண்டிலேயே செயல்படுத்தியது.
0 comments :
Post a Comment