அமெரிக்காவில் நான்கு கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது- அமெரிக்கா ஜனாதிபதி

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-


கொரோனா வைரசை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, UK போன்ற நாடுகள் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

குறிப்பாக அமெரிக்கா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் கடும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

November 3ம் திகதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னராக தடுப்பூசியை கண்டுபிடித்து அமெரிக்கர்களுக்கு வழங்க அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக பல தடுப்பூசிகளும் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை வாய்ப்பாக பயன்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்தும் வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனை எதிர்த்தும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் நான்கு கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது:-


ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசி இறுதி கட்டமான 3ம் கட்ட பரிசோதனைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவில் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.


கொரோனா வைரஸின் தடுப்பூசி பரிசோதனைகளில் அமெரிக்கர்கள் பங்கேற்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இது அமெரிக்காவுக்கு மிகவும் அத்தியாவசியமானதொன்று.

அமெரிக்காவின் வரலாற்றிலேயே மிக விரைவான பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்கள் அனுகுமுறை அறிவியலுக்கு ஆதரவான ஒன்று. ஆனால் ஜோ பைடனின் அணுகுமுறை அறிவியலுக்கு எதிரான ஒன்று.

ஜோ பைடனின் அணுகுமுறை என்னவென்று எனக்குத் தெரியவில்லை, இருந்தாலும் நாங்கள் ஏற்கனவே செய்தவற்றிலிருந்து நிறைய நகலெடுக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான பயணத் தடையை ஜோ பைடன் எதிர்த்தார். அவர்களிடம் முடிவுறாத ஊரடங்கு நடைமுறை யுக்திகள் தான் உள்ளது. நாம் ஒன்றும் முழு ஊரடங்கை அமுல்படுத்தவில்லை.

நாம் உண்மையில் இதற்கு முன் அனுபவிக்காத அளவிலான மிகப்பெரிய பொருளாதார விகிதத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறோம். எனது திட்டம் கொரோனா வைரசை அழிப்பது... ஆனால் ஜோ பைடனின் திட்டமோ அமெரிக்காவை அழிப்பது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :