ஆஸ்வத்திரிச்சேனை விவசாய அமைப்பினால் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸுக்கு பாராட்டு!



சர்ஜுன் லாபீர்-
ம்மாந்துறை நீர்பாசன பொறியலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆஸ்வத்திரிச்சேனை விவசாய அமைப்பினரால் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம் எம் ஹரிஸினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று(19) ஆஸ்வத்திரிச்சேனை விவசாய அமைப்பின் தலைவர் எம்.எம்.சுலைமாலெப்பை தலைமையில் சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு,விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாகவும்,விவசாய அமைப்புக்களின் தேவைகள் சம்மந்தமாகவும் கேட்டறிந்து தீர்வு வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக இறக்காமம் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர்,சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ் நவாஸ்,தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பிரயோக விஞ்ஞான பீடாதிபதியும்,சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம் ரஸ்மி,சட்டத்தரணி எம் சியாத், ஆஸ்வத்திரிச்சேனை விவசாய அமைப்பின் ஒருங்கினைப்பாளர் ஏ.எச்.எம் தஸ்லிம் உட்பட நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,வட்டானைமார் சங்கத்தின் பிரதிநிதிகள்,விவசயிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :