திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற சட்டத்தரணியும் பிரபல ஊடகவியலாளரும், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் அவர்களுடனான சமூக மேம்பாடு தொடர்பிலான சினேகபூர்வ கலந்துரையாடல் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை
காரியாலயத்தில்
நேற்று( 18) மாலை நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் தலைவர் வைத்திய கலாநிதி எம். எச்.ரிஸ்பின் செயலாளர் எஸ்.எல்.எம். இப்ராஹிம் மற்றும் செயற்குழு, நிருவாக குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இக்கலந்துரையாடலில்
அம்பாறை மாவட்டத்தில் இன நல்லுறவின் அவசியம் ஏனைய சமூகங்களுடனான உறவுகளை ஒற்றுமையுடன் வலுப்படுத்த வேண்டிய அவசியம்
பற்றியும் சமூக மேம்பாடு தொடர்பில் அம்பாறை மாவட்டத்தின் நிலையை மேம்படுத்த வேண்டிய விடயங்ககள் எமது சமூகத்தின் இருப்பு மற்றும்
பொது அரசியலின் பின்னணியில் கற்ற சமூகத்தின் பங்களிப்புகள்,
சமூக ரீதியான அரசியல் கலாச்சாரத்தை முன்னேற்ற வேண்டிய அவசியம் தொடர்பாகவும்
சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் செயற்திட்டங்கள்
முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஒன்றிணைத்து செயற்பட வேண்டிய அவசியம் பற்றியும்
சமூகம் எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் மற்றும் அதனை கையாள வேண்டிய நடவடிக்கைகள்
பற்றி இதன் போது
கலந்துரையாடப்பட்டன.
0 comments :
Post a Comment