சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பகுதியில் துப்பாக்கி மீட்பு .


ஐ.எல்.எம் நாஸிம்,
பாறுக் ஷிஹான்-

ம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பகுதியில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி மீட்பு .

இங்கிலாந்து தயாரிப்பு சொட்கண் ரக துப்பாக்கியொன்று மைதானம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த துப்பாக்கி இன்று (22) காலை சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ரத்னமல தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தி இத்துப்பாக்கியை மீட்டுள்ளனர். 

குறித்த இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கியுடன் 6 ரவைகளும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மீட்கப்பட்ட துப்பாக்கி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :