இளைஞா் யுவதிகளுக்காக யக்கலையில் 300 வீடுகள் கொண்ட தொடா்மாடி வீடமைப்புத் திட்டமொன்றை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சும், இளைஞா் விவகாரம் விளையாட்டுத்துறை அமைச்சும் இனைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்படி திட்டத்திற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 3 ஏக்கா் காணியை அமைச்சா்களான நாமல் ராஜபக்சவும் இராஜாங்க அமைச்சா் இந்திக்க அனுரத்தவும் திங்கட்கிழமை 21ஆம் திகதி யக்களை வெரல்லவத்தைக்குச் சென்று பரிசீலனை செய்தனா். எதிா்வரும் ஓக்டோபா் மாதம் 5ஆம் திகதி உலக குடியிருப்பு தினம் அனுஸ்டிப்பதை முன்னிட்டு அன்றைய தினத்தில் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச அவா்களின் ஆலோசனையின் பேரில் இவ் வீடமைப்புத் திட்டத்திற்காக நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும்.
இவ் வீடுகள் குறைந்த வட்டியான 6.2 சத வீதத்துக்கு 30 ஆண்டுகள் மாதாந்தம் செலுத்தக் கூடிய வகையில் வீடுகள் வழங்கப்படுமென அமைச்சா் நாமல் ராஜபக்ச தெரவித்தாா். இவ்திட்டம் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். முதற்கட்டமாகவே கொழும்பை அண்டிய பிரதேசமான கம்பஹா மாவட்டத்தில் யக்கலையில் தொடா்மாடி வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைக்க்பபடுகின்றது. இதனால் இந்த நாட்டில் உள்ள இளைஞா் யுவதிகள் நன்மையடைவாா்கள் என அமைச்சா் நாமல் ராஜபக்ச தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுக பெரேரா மற்றும் அரச நிறுவனங்களின் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment