சர்வாதிகார ஆட்சியை கொண்டு வரும் 20வது திருத்தச் சட்டத்தை முன்வைத்துள்ள அரசாங்கம் - மங்கள சமரவீர



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
2020ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள பாதிப்பான விடயங்களை நீக்குவதாக மக்களுக்கு கூறிய தற்போதைய அரசாங்கம், அதற்கு பதிலாக மக்களின் சுதந்திரம், மனித உரிமை மற்றும் சட்ட உரிமையை நீக்கி விட்டு, ஒரு நபரை கேந்திரமாக கொண்ட தன்னிச்சையான அதிகாரத்திற்கு அடிக்கல் நாட்டும் புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

J.R ஜயவர்த்தனவின் அரசியலமைப்புச் சட்டம் ஏகாதிபத்தியவாத சட்டம் எனக் கூறி எதிர்த்த மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோரே ஒரு குடும்பத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் ஒரு முறை சர்வாதிகார ஆட்சியை கொண்டு வரும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முன்வைத்துள்ளதாக மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்து மக்களுக்கு பிரதிபலன்களை பெற்றுக்கொடுப்பது இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வர காரணமல்ல. சர்வதிகாரியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தெரிவாகும் நாட்டின் இரட்டை மக்கள் ஆணையில் தெரிவாகும் பாரளுமன்றம் மாத்திரமல்ல, நீதித்துறையும் தரம் தாழ்த்தப்படும் என்பது அச்சுறுத்தலுக்குள்ளாகும்.

நீதிச் சேவைகள் ஆணைக்குழு உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது மாத்திரமல்ல, நீக்கும் அதிகாரமும் ஜனாதிபதி தன்வசப்படுத்தியுள்ளார்.



தம்மை நீக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டுள்ளதால், நீதிச் சேவைகள் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள், பாரளுமன்ற செயலாளர் உட்பட சுயாதீன ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியை திருப்திப்படுத்த நேரிடும்.

இப்படியான நிறுவனங்களில் மக்கள் எதிர்பார்க்கும் சுயாதீனம், நீதி, நியாயம் எதுவும் எந்த வகையிலும் மக்களுக்கு கிடைக்க போவதில்லை.

இவ்வாறு அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் ஒரு நபரின் ஊடாக குடும்பத்தை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் போது பாரளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இருந்து ஏற்படும் எதிர்ப்பை சமாளிக்கக் கூடிய வகையில் அமைச்சரவை எண்ணிக்கை தொடர்பாக இதுவரை இருந்து வந்த வரையறை நீக்கப்பட்டு, நினைத்தால் போல் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தையும் ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளார் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :