இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு1

எம்.வை.அமீர், சலீம் றமீஸ்-
லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா கடந்த செப்டம்பர் 16, 17 ஆம் திகதிகளில் ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
செப்டம்பர் 16 ஆம் திகதி காலை அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள் பீட மற்றும் பொறியியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. அன்றைய தினம் பிற்பகல் கலை கலாசார பீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இரண்டாம் நாள் அமர்வாக செப்டம்பர் 17 ஆம் திகதி முற்பகல் 9 மணியளவில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. பிற்பகல் முகாமைத்துவ வர்த்தக பீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்..
இந்நிகழ்வில் மேற்படி ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப் பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன் 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எம்.ஏ. கரீம் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எம்.ஐ.எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்..
இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எம் எம் நாஜிம் பதிவாளர் எச். அப்துல் சத்தார் உட்பட பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாள் நிகழ்வின் போது கமரா சுவீகரித்த காட்சிகளில் சில...








































































எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :